காபூல் (ஆப்கானிஸ்தான்):உணவுப்பஞ்சம் காரணமாக சொந்த மகள்களை விற்கும் நிலைக்கு ஆப்கன் பெற்றோர் தள்ளப்பட்டிருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரவிருக்கும் குளிர்காலத்தில் ஆப்கானிஸ்தானில் 2.2 கோடிக்கு மேற்பட்ட மக்கள் உணவுத் தட்டுப்பாட்டை சந்திப்பார்கள் என ஐ.நா. சபை எச்சரித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்தனர்.
உருவாகிய உணவுப்பற்றாக்குறை
தாலிபான்கள் திடீரென ஆட்சியைப் பிடித்ததால் பல்வேறு சீர்கேடுகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், காலநிலை மாற்றத்தால் பயங்கர வறட்சியும் ஏற்பட்டது. இதன்விளைவாக ஆப்கன் மக்கள் உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளனர்.
இதுகுறித்து உலக உணவுத் திட்டத்தின் தலைமை இயக்குநர் டேவிட் பீஸ்லி, "இந்த குளிர்காலத்தில் பல லட்சக்கணக்கான ஆப்கன் மக்கள் உணவுக்காக புலம்பெயர்வார்கள் அல்லது பசியால் வாடுவார்கள். மக்களின் உயிரைக் காப்பாற்ற நாம் உதவி வழங்க வேண்டும்.