தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கொரோனாவால் தனது முடிவை அதிரடியாக மாற்றிய நேபாளம்! - விசிட் நேபால் இயர் 2020

காத்மாண்டு: கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக 'விசிட் நேபால் இயர் 2020' என்ற பரப்புரை நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவகதாக நேபாளம் அறிவித்துள்ளது.

Nepal suspends 'Visit Nepal Year 2020
Nepal suspends 'Visit Nepal Year 2020

By

Published : Mar 1, 2020, 7:10 PM IST

நேபாளத்தில் சுற்றுலாவைப் பிரபலப்படுத்தும் நோக்கில் 'விசிட் நேபால் இயர் 2020' என்ற பரப்புரை இந்தாண்டு தொடக்கத்தில் தொடங்கப்பட்டது. இதற்காக பல்வேறு நாடுகளிலும் நேபாள சுற்றுலாத் துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்நிகழ்ச்சி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுற்றுலாத் துறை அமைச்சர் யோகேஷ் பட்டரை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விசிட் நேபால் இயர் 2020 பரப்புரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. நிலைமை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினால், மீண்டும் இத்திட்டத்திற்கான பரப்புரை தொடங்கப்படும்" என்று கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்று சீனாவைத் தவிர ஜப்பான், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவிவருகிறது. கொரோனா வைரஸ் தொற்றால், அமெரிக்காவில் இன்று முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்க பொருளாதாரம் தொடர்ந்து பல நாள்களாக சரிவை சந்தித்துவருகிறது.

இதையும் படிங்க: கொரோனா எதிரோலி - ஈரானில் சிக்கிக் கொண்ட கேரள மீனவர்கள்!

ABOUT THE AUTHOR

...view details