குளோபல் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான தலையங்கத்தில், "நேர்மறையான சமிஞ்சைகள் இல்லாமை, மற்றும் இந்தியாவின் சமீபகால போக்கு இந்தியா-சீனா எல்லையில் பதற்றத்துக்கு வழிவகுத்துள்ளது.
இந்நாடுகளின் நல்லுறவு புதிய கட்டத்துக்குள் நுழைவது போன்று தெரிகிறது. ஆனால், இதற்கு பலகாலம் ஆகலாம்...." என எழுதப்பட்டுள்ளது. இந்த கருத்து சீனாவின் நிலைப்பாட்டை உணர்ந்ததாகப் புரிந்துகொள்ளப்படுகிறது.
லடாக் யூனியன் பிரதேசத்தின் கிழக்குப் பகுயில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோடு அருகே இந்திய, சீன படைகள் குவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை இந்திய ராணுவம் உறுதிசெய்யவில்லை.
மிகவும் குறைந்த அளவு ஜனத்தொகை கொண்ட லடாக், பெரும்பாலும் பனியாலே மூடப்பட்டிருக்கும். ஆனால், கோடை காலத்தில் பணி உருகி நிலம் கண்ணுக்குத் தெரியும்போது இருநாட்டு ராணுவத்தினரும் மோதிக்கொள்வது வழக்கமாகிவிட்டது.
தற்போது ஏற்பட்டுள்ள பதற்றத்துக்குக் காரணம், மே-5ஆம் தேதி நடந்த மோதல் சம்பவம். லடாக்கின் கிழக்குப் பகுதியில் உள்ள பங்கோங் சா ஏரியின் வடக்கு கரையில் இருநாட்டு ராணுவத்தினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
அதுபோல், மே 9ஆம் தேதி சிக்கிமின் வடக்குப் பகுதியில் உள்ள நான்குகள் லா மலைப் பகுதியில் மற்றொரு சம்பவம் அரங்கேறியது. இந்த கைகலப்பில் குறைந்தது 100 (இருதரப்பு) ராணுவத்தினர் காயமடைந்ததாகத் தெரிகிறது.