தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

வடகொரியா - அமெரி்க்கா அமைதிப் பேச்சுவார்தையில் முன்னேற்றம்!

சியோல்: அமெரிக்கா-வடகொரியா இடையேயான இரண்டாம் உச்சி மாநாட்டில் ஒப்பந்தம் ஏதும் எட்டப்படவில்லை என்றாலும், இருநாடுகளுக்கும் இடையேயான அமைதிப் பேச்சுவார்தையில் முன்னேற்றம் கண்டுள்ளது என தென்கொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வடகொரியா அதிபர் கிம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

By

Published : May 3, 2019, 8:44 PM IST

கொரியா தீபகற்பத்தில் அணு ஆயுத ஒழிப்பு குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையே, கடந்த பிப்ரவரி மாதம், தாய்லாந்து தலைநகர் ஹனாயில் இரண்டாம் உச்சிமாநாடு நடைபெற்றது.

பல்வேறு தரப்பினராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த உச்சி மாநாட்டில் எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை. இதனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வி எனவே கருதப்பட்டது.

தற்போது, இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தென்கொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் கங் யாங் வா (Kang kyung wa) , ஹனாயில் நடைபெற்ற இரண்டாம் உச்சி மாநாட்டில் ஒப்பந்தங்கள் ஏதும் எட்டப்படவில்லை என்றாலும், இருநாட்டிற்கும் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தென் கொரிய வெளியுறவுத் துறை அமைச்சர் கங் யாங் வா

மேலும், அமெரிக்காவுடன் மூன்றாம் உச்சி மாநாட்டிற்கு தான் தயாராக உள்ளதாக வடகொரிய அதிபர் கிம் கூறியதை குறிப்பிட்டு பேசிய அவர், இருநாடுகளுக்கும் இடையே விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details