தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கச்சா எண்ணை இறக்குமதி: இந்தியாவுக்கு சிக்கல்! - ஈரான் அணு ஆயுத ஒப்பந்தம்

வாஷிங்டன்: ஈரானிடமிருந்து கச்சா எண்ணை இறக்குமதி செய்வதற்கு இந்தியா உட்பட எட்டு நாடுகளுக்கு அளிக்கப்பட்ட இடைக்கால அனுமதியை ரத்து செய்வுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

கச்சா எண்ணை இறக்குமதி: இந்தியாவிற்கு சிக்கல்

By

Published : Apr 23, 2019, 12:47 PM IST

அமெரிக்கா, ஈரான், பிரிட்டன், சீனா, ஃப்ரான்ஸ் உள்ளிட்ட எட்டு நாடுகள் இடையே, 2015ஆம் ஆண்டு ஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் கைழுயெழுத்தானது.

இந்நிலையில், இந்த ஒப்பந்தத்துக்கு முரணாக ஈரான் செயல்படுவதாக குற்றஞ்சாட்டிய அமெரிக்க அதிபர் டொலான்டு ட்ரம்ப், அதிலிருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக, 2016 மே மாதம் அதிரடியாக அறிவித்தார்.

இதையடுத்து, ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்த அமெரிக்கா, அந்நாட்டிடமிருந்து கச்சா எண்ணை இறக்குமதி செய்யும் நாடுகள், அதனை நிறுத்திக்கொள்ளவில்லை என்றால் அவற்றின் மீதும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது. இதில், இந்தியாவும் ஒன்று.

ஈரானிடமிருந்து மாதத்திற்கு சுமார் 1.25 மில்லியன் டன் கச்சா எண்ணை இறக்குமதி செய்துவரும் இந்தியா, இந்த விவகாரம் குறித்து மௌனம் காத்தது.

2018 நவம்பர் மாதம், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் அமலுக்கு வந்த நிலையில், அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு முரணாக செயல்பட்ட இந்தியா உள்ளிட்ட எட்டு நாடுகளுக்கு ஈரானிடமிருந்து கச்சா எண்ணை இறக்குமதி செய்ய தற்காலிக (ஆறு மாதங்களுக்கு) அனுமதி வழங்கியது.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த வெள்ளை மாளிகை செயலாளர் சாரா ஹக்கபீ, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அளித்துவந்த இடைக்கால அனுமதி அடுத்த மாதம் 2ஆம் தேதியோடு நிறைவடைய உள்ள நிலையில், மேலும் இதனை நீட்டிப்பதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறினார்.

இவரைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, 'ஈரான் மீது அமெரிக்கா விதித்திருக்கும் தடைகளை மீறும் நாடுகள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும்' என எச்சரிக்கை விதித்துள்ளார்.

இதனால், ஈரானிடமிருந்து இந்தியா, கச்சா எண்ணை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details