தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - சீனா அறிவுறுத்தல் - modi xi jinping meet in mamallapuram

பெய்ஜிங்: ஜம்மு காஷ்மீரில் 370 சிறப்பு சட்டம் நீக்கப்பட்ட விவகாரத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதியை ஏற்படுத்த இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என சீனா தெரிவித்துள்ளது.

modi

By

Published : Oct 9, 2019, 10:21 AM IST

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு தகுதிச் சட்டம் 370 நீக்கம் செய்யப்பட்டது முதல் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தானிற்கு ஆதரவான கருத்துகளை சீனா தெரிவித்துவருகிறது. மேலும் சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் ஜம்மு காஷ்மீர் குறித்த விவாதத்தில் பங்கேற்க இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்தது. அந்த விவாதத்தில் இந்தியா தனது நிலைப்பாட்டை உறுதியாக தெரிவித்ததோடு காஷ்மீரில் சிறப்புச் சட்டம் விலக்கப்பட்டதால் சீனாவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை எனக் கூறியது.

இதற்கிடையே சீன அதிபர் ஷி ஜின்பிங் மூன்று நாள் பயணமாக இந்தியா வரவுள்ளார். அப்போது அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாட்டின் சென்னை அருகேயுள்ள மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேசுகிறார். அக்டோபர் 11ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பின்போது, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பல முக்கிய பிரச்னைகள் குறித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கெங் சுவாங், காஷ்மீர் பிரச்னையில் தீர்வு காண இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையின் மூலம் இருநாடுகளுக்கு இடையே நம்பிக்கையும், நல் உறவும் அதிகரிக்கும் எனக் குறிப்பிட்ட அவர், இதுவே அண்டை நாடுகள் மற்றும் உலக நாடுகளின் எதிர்பார்ப்பாகவும் உள்ளதாகக் கூறினார்.

மேலும் அவர், இந்தியா - சீனா இடையேயான உறவில் தொடர்ந்து இருநாடுகளும் சீரான ஆதரவு அளிப்பதால் அது வளர்ச்சிப்பாதையை நோக்கி பயணிக்கிறது. இருநாடுகளும் மிகவும் முக்கியமான அண்டைநாடுகளாக உள்ளன. சர்வதேச அளவில் இருநாடுகளின் சந்தைகளும் சந்தைகளும் மிகப்பெரிய அளவில் மேலோங்கி வருகின்றன. குறிப்பாக கடந்தாண்டு சீனாவின் வூகாண் நகரில் இந்தியப் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான சந்திப்பிற்குப் பின், இந்த வளர்ச்சி அதிகரித்துள்ளது. இது தவிர இருநாடுகளும் பல்வேறு துறைகளிலும் பல முக்கிய பிரச்னைகளை கையாளுவதிலும் சிறந்த முறையில் ஒத்துழைத்துச் செல்வதாக அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் மூன்று நாள் சுற்றுப்பயணமாக சீனா சென்றுள்ளார். அவர், அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் உடன் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து சீன அதிபர் இந்தியா வரவுள்ள நிலையில், சீனாவின் இந்தக் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details