இந்தோனேசியாவில் இன்று 6.5 ரிக்டர் அளவில் வலுவான நிலநடுக்கம் தாக்கியுள்ளது. ஆனால், அங்கு சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
மலுக்கு தீவில் அருகே, இந்தோனேசிய நேரப்படி காலை சுமார் 8.45 மணிக்கு 29 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.