அமெரிக்க அரசு ஆப்கானிஸ்தானிலிருந்து ராணுவப் படைகளை திரும்பப்பெற்றதை அடுத்து ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களை 20 ஆண்டுகளுக்கு பிறகு தாலிபன்கள் கைப்பற்றினர்.
தலைநகர் காபூலில் ஆள் அரவமற்றிருந்த காவல் நிலையங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த அவர்கள் பல இடங்களில் கொள்ளை அடித்ததாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் அரசு, தாலிபன்களுக்கிடையேயான பேச்சுவார்த்தைக்குப் பிறகு தாலிபன்கள் இடைக்கால அரசை அமைத்தனர். இதைத்தொடர்ந்து அந்நாட்டு அதிபராக இருந்த கானி வெளியேறினார்.
ஜனவரி 2003ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 2005ஆம் ஆண்டு வரை அந்நாட்டின் உள்துறை அமைச்சராக இருந்த அலி அஹ்மத் ஜலாலி புதிதாக உருவாகியுள்ள இடைக்கால அரசின் தலைவராக நியமிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.