தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஆப்கானிஸ்தான் தேர்தல் முடிவுகள் வெளியிடுவதில் தாமதம்! - ஆப்கானிஸ்தான் தேர்தல் முடிவுகள்

காபூல்: ஆப்கானிஸ்தானில் அதிபருக்கான தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், முடிவுகளை அறிவிக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Election
Election

By

Published : Feb 8, 2020, 5:03 PM IST

ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், இதனை கண்டிக்கும் விதமாக மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால், நாட்டின் பாதுகாப்பும் அரசியல் ஸ்திரதன்மையும் கேள்விக்குறியாகி உள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போராட்டக்காரர் ஒருவர் கூறுகையில், "முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிடாவிட்டால் ஆணையத்தின் அலுவலக கதவுகளை தட்டி நீதி கேட்போம். தேர்தலில் நடைபெற்ற முறைகேடு குறித்து விசாரிக்க கோரிக்கை விடுத்துள்ளோம். முடிவுகளை விரைவில் வெளியிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளோம்" என்றார்.

2019ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி முதல்கட்ட முடிவுகள் வெளியிடப்பட்டது. இதன்படி, அஷ்ரப் கானி 50 விழுக்காடு வாக்குகளை பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலில் தோல்வியுற்ற அப்துல்லா வாக்குப்பதிவில் முறைகெடு நடந்திருப்பதாக புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: டெல்லி தேர்தல்: இந்தியா மீதான கருத்தாக்கத்தின் தீர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details