ஆப்கானிஸ்தானில் தாலிபான் தலைமையிலான அரசு ஆட்சியமைத்துள்ளது. புதிதாக அமைந்துள்ள இஸ்லாமிக் அமீரக அரசின் அமைச்சரவைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலை தலைமை செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் வெளியிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் பிரதமராக முல்லா முகமது ஹசன் பதவிவகிக்கவுள்ளார். முல்லா அப்துல் கனி பரதார், மொலாவி அப்துல் சலாம் ஹனாபி ஆகியோர் துணைப் பிரதமராகப் பதவிவகிக்கவுள்ளனர்.
பெண்களுக்கு இடமில்லை
தாலிபான் அமைப்பின் முன்னோடி முல்லா ஓமரின் மகன் யாகூப் முஜாஹித் பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், அமெரிக்காவால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டிருந்த சிராஜுதீன் ஹக்கானி உள் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆமீர் கான் முட்டாகி வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மொத்தமுள்ள 33 பேர் கொண்ட அமைச்சரவைப் பட்டியலில் பெண்களுக்கு இடமில்லை. அதேபோல், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சிறுபான்மையினர் (ஹசாரா) யாரும் இடம்பெறவில்லை.
இதையும் படிங்க:இந்தோனேசியா சிறையில் பயங்கர தீ- 41 கைதிகள் உயிரிழப்பு!