ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரவாத ஆதரவு மற்றும் தடைகள் கண்காணிப்புக் குழுவின் 26ஆவது அறிக்கையின்படி, ஆப்கானிஸ்தான் நாட்டின் நிம்ருஸ், ஹெல்மண்ட் மற்றும் கந்தகார் மாகாணங்களில், ஐ.எஸ்.ஐ.எஸ், அல்-கொய்தா மற்றும் அதனுடன் தொடர்புடைய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள், இந்திய துணைக் கண்டத்தில் அல்-கொய்தா (AQIS) என்ற பெயரில் தலிபான் அமைப்பின் கீழ் செயல்பட்டுவருவது தெரியவந்துள்ளது.
இந்தக் குழுவில் வங்கதேசம், இந்தியா, மியான்மர் மற்றும் பாகிஸ்தானில் இருந்து 150 முதல் 200 உறுப்பினர்கள் உள்ளதாகவும், இந்த அமைப்பின் மறைந்த அசிம் உமர் மரணத்திற்குப் பழிவாங்க பிராந்தியத்தில் பதிலடி நடவடிக்கைகளைத் திட்டமிட்டுள்ளதாக ஐ.நா சந்தேகிக்கிறது.
ஆப்கானிஸ்தானில் உள்ள மொத்த பாகிஸ்தான் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை ஆறாயிரம் முதல் ஆறாயிரத்து 500வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என ஐ.நா தெரிவித்தது.