தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல்: நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு - afghanistan election

காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று அதிபர் தேர்தல் நடைபெறுவதையொட்டி அந்நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

afghan

By

Published : Sep 28, 2019, 1:24 PM IST


உள்நாட்டுப் போரில் சிக்கித்தவிக்கும் மத்திய ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில் இன்று அதிபர் தேர்தல் நடைபெற்றுவருகிறது.

இதனிடையே, வாக்குச்சாவடிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என்று பயங்கரவாதக் குழுக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் அந்நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கிய சிலமணி நேரத்தில், முக்கிய நகரங்களில் ஒன்றான கந்தகாரில் ஒரு வாக்குச்சாவடி மையத்துக்கு அருகே வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், ஏராளமானோர் காயமடைந்ததாகக் கூறப்பட்டுவருகிறது.

சமீபத்தில், தலிபான்-அமெரிக்கா இடையே அமைதிப் பேச்சுவார்த்தை திடீரென தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இந்தத் தேர்தலானது நடைபெறுகிறது. முன்னதாக, இந்தத் தேர்தல் இருமுறை தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details