ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வான்வெளிப்படையினர் தலிபான்களை குறிவைத்து மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சேபர்கான் பகுதியில் நடைபெற்றத் தாக்குதலில் சுமார் 200க்கும் மேற்பட்ட தலிபான்கள் கொல்லப்பட்டதாக ஆப்கான் பாதுகாப்புப் படை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா படை விலகல் மேற்கொண்ட பின் அமெரிக்கப் படையினர் மேற்கொண்ட மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும்.
ஆப்கானின் பெரும்பாலான ஊரகப் பகுதிகளை தனது கட்டுக்குள் கொண்டுவந்த தலிபான்கள், தற்போது நகர்புறங்களையும் கைப்பற்ற முனைப்புக் காட்டிவருகிறது.
தலிபான்களை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் ஆப்கான் பாதுகாப்புப்படை அமெரிக்க படையுடன் இணைந்து வான்வெளித் தாக்குதல் நடத்திவருகிறது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றத் தாக்குதலில் 385 தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்புப்படை தகவல் தெரிவிக்கிறது.
இதையும் படிங்க:பாகிஸ்தானில் இந்து கோயில் தாக்குதல்- 20 பேர் கைது, 150 பேர் மீது வழக்குப்பதிவு!