காபூல் : ஆப்கானிஸ்தான் துணை அதிபர் அம்ருல்லா சலே, “ஆப்கானிஸ்தான் மக்களின் அன்புக்குரியவன் நானே, நானே ஆப்கானிஸ்தானை பாதுகாக்கும் அதிபர் என செவ்வாய்க்கிழமை (ஆக.17) ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பெயரில் வெளியாகியுள்ள ட்விட்டர் பதிவில், “நாட்டின் அதிபர் தற்போது இங்கு இல்லாததால் நானே அதிபர் ஆகிறேன். நான் தற்போது நாட்டுக்குள் இருக்கிறேன். மக்களை பாதுகாக்கும் அதிபர் நானே. இது தொடர்பாக அனைத்து தலைவர்களிடமும் அவர்களின் கருத்தையும், ஆதரவையும் பெற அணுகிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபன்களை அடக்கி ஒடுக்கிய ராணுவத்தை கட்டமைத்த மசூத்தின் நெருங்கிய உதவியாளர்தான் அம்ருல்லா சலே. பின்னாள்களில் இவர் ஆப்கானிஸ்தானின் துணை அதிபராக உயர்ந்தார்.
இவருக்கு அமெரிக்க ஆதரவு இருந்தது. தற்போது ஆப்கானிஸ்தானில் இருந்து அதிபர் அஷ்ரப் கானி வெளியேறிய நிலையில், அம்ருல்லா சலே குறித்தும் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.