தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை: ஐஎஸ் பயங்கரவாதி சுட்டுக்கொலை - அசாதுல்லா ஓராக்ஸாய்

காபூல்: கிழக்கு ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையின்போது, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் உயர் பதவி வகிக்கும் ஒருவர்  கொல்லப்பட்டதாக அந்நாட்டு உளவுத்துறை  தெரிவித்துள்ளது.

afghan-troops-kill-senior-islamic-state-militant
afghan-troops-kill-senior-islamic-state-militant

By

Published : Aug 2, 2020, 6:59 PM IST

இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அசாதுல்லா ஓராக்ஸாய் இஸ்லாமிய அரசின் உளவுத்துறைத் தலைவர் என்றும், சிறப்புப் படைகள் அவரை ஜலாலாபாத் அருகே கொன்றதாகவும் கூறியுள்ளது.

ஒராக்சாய் ஆப்கானிஸ்தானில் ராணுவம் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான பல பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது, ​​இந்தாண்டின் முதல் ஆறு மாதங்களில் நாடுமுழுவதும் பயங்கரவாத வன்முறையில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த பொதுமக்களின் எண்ணிக்கையில் 13 விழுக்காடு குறைந்துள்ளதாக ஆப்கானிஸ்தானில் நிலவும் பயங்கரவாத சூழல் குறித்து, ஐக்கிய நாடுகள் சபை கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில், தெரிவித்துள்ளது.

பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஆப்கானிஸ்தான் ராணுவ படைகளுக்கு உலக நாடுகளின் ஆதரவான செயல்பாடும், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தாக்குதல்கள் கணிசமான அளவு குறைத்திருப்பதே, இறப்பு விகிதம் குறைந்திருப்பதற்கான காரணமாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக, ஆப்கானிஸ்தானில் 2020 ஆண்டின் ஆம் முதல் ஆறு மாதங்களில் ஆயிரத்து 282 பேர் வன்முறையில் கொல்லப்பட்டுள்ளதாகவும் இரண்டாயிரத்து 176 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் குறிப்பிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம், ஆப்கான் தலைநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள குருத்வாரா என அழைக்கப்படும் சீக்கிய வழிபாட்டு தளத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த ஐஎஸ் பயங்கரவாதி ஒருவர் நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 8 பேர் காயமடைந்தனர்.

இதனையடுத்து வழிபாட்டு தளத்திற்குள் சிக்கியிருந்த 80க்கும் மேற்பட்ட வழிபாட்டாளர்களை ஆப்கானிஸ்தான் சிறப்புப் படைகள் பத்திரமாக மீட்டது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details