ஆப்கானிஸ்தானின் தாலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக நடந்துவரும் உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா முயற்சி மேற்கொண்டது. அதன் பயனாக தாலிபான்கள் - ஆப்கானிஸ்தான் அரசு இடையே கத்தார் நாட்டில் வைத்து அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.
ஆனால், தாலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் தங்கள் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்திவருகின்றனர். கடந்த வாரம், இரு தரப்பினரிடையே கடுமையான தாக்குதல் நடைபெற்றது. டிசம்பர் 9ஆம் தேதி வரை கணக்கிட்டதில், கிட்டத்தட்ட 150-க்கும் அதிகமான தாலிபான் பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர்.