தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஆப்கன் அரசமைப்பில் அதிகாரப்பகிர்வு முறை அமல் - ஆப்கானிஸ்தான் எதிர்கட்சி தலைவர் அப்துல்லா

காபூல்: ஆப்கானிஸ்தானில் அதிபர் அஷ்ரஃப் கனி, எதிர்க்கட்சித் தலைவர் அப்துல்லாவுடன் இணைந்து அதிகாரப் பகிர்வு முறையில் ஆட்சி நடத்தவுள்ளார்.

Afghan
Afghan

By

Published : May 18, 2020, 1:56 PM IST

ஆப்கானிஸ்தானில் 2019ஆம் ஆண்டு முதல் அரசியல் ஸ்திரமற்ற தன்மை நிலவி வருகிறது. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றபின், ஆப்கனில் உள்ள அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறும் முடிவை எடுத்தார்.

இதன் தொடர்ச்சியாக, அங்குள்ள தலிபான் பயங்கரவாத அமைப்புடன் அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொண்ட அமெரிக்கா, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி ஒப்பந்தத்தை மேற்கொண்டது.

அதே வேளை, அந்நாட்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 50% வாக்குகளுக்கு மேலாகப் பெற்று அஷ்ரஃப் கனி மீண்டும் அதிபராகப் பொறுப்பேற்றார். எதிர்க்கட்சித் தலைவர் அப்துல்லா 39% வாக்குகள் பெற்றார். தற்போது ஆப்கனில் தலிபான்களின் கை ஓங்கி வருவதையடுத்து, அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக இரு தலைவரும் இணைந்து செயல்படும் முயற்சியில் களமிறங்கியுள்ளனர்.

இதன் முக்கிய நகர்வாக அதிபர் அஷ்ரஃப் கனி, தனது அரசியல் எதிர் தரப்பான அப்துல்லாவுடன் அரசின் அதிகாரப்பகிர்வை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளார். இந்த முடிவு அரசின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:கில்ஜித் - பல்ஜிஸ்தானில் காபந்து அரசு நியமனம்

ABOUT THE AUTHOR

...view details