உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 300-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்று மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு பல்வேறு நாட்டு தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கானியும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.