தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

2,000 தலிபான் கைதிகளை விடுவித்த ஆப்கான் அரசு - 2,000 தலிபான் கைதிகள்

காபூல்: ஆப்கான் - தலிபான் போர் நிறுத்தம் மேற்கொண்டுள்ள நிலையில், ஈகை திருநாள் காரணமாக நல்லெண்ண நடவடிக்கையாக 2 ஆயிரம் தலிபான் சிறைக் கைதிகளை விடுவிக்க ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார்.

Afghan
Afghan

By

Published : May 25, 2020, 10:54 AM IST

Updated : May 25, 2020, 12:05 PM IST

ஆப்கானிஸ்தான் சிறையிலிருக்கும் 2 ஆயிரம் தலிபான் கைதிகளை விடுவிக்க அந்நாட்டு அதிபர் அஸ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, அந்நாட்டு செய்தித் தொடர்பாளர் சித்திக் சித்திக்கி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஈகைத் திருநாளை அடுத்து தலிபான் 3 நாள் போர் நிறுத்தத்தை அறிவித்த முடிவு வரவேற்கத்தக்கது. இந்த நல்லெண்ண நடவடிக்கையை ஊக்குவிக்கும் விதமாக 2 ஆயிரம் தலிபான் சிறைக் கைதிகளை விடுவிக்க அதிபர் கானி உத்தரவிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் முயற்சி காரணமாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க - தலிபான் அமைதி ஒப்பந்தம் கடந்த பிப்ரவரி மாதம் 29ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு முக்கிய அம்சமாக ஆப்கான் சிறையில் உள்ள 5 ஆயிரம் தலிபான் பயங்கரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

முதலில் அதிபர் கானி இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதில் தயக்கம் காட்டிவந்த நிலையில், தற்போது 2 ஆயிரம் பேரை விடுதலை செய்வதாக அறிவித்துள்ளது முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:சிரிய உள்நாட்டுப் பிரச்னையின் பின்னணி

Last Updated : May 25, 2020, 12:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details