டெல்லி:ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபன்கள் தாக்குதல் நடத்தி ஆட்சியை பிடித்துவிட்டனர். தற்போது அதிபர் மாளிகை இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனிடையே, அஷ்ரப் கானி பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
தலைநகர் காபூல் விமான நிலையத்தில் மற்ற நாடுகளுக்கு செல்ல பொதுமக்கள் குவிந்துவருகின்றனர். ஆப்கானில் நிலவும் பதற்றம் காரணமாக பல்வேறு நாடுகள் காபூல் விமான நிலையத்திற்கான போக்குவரத்தை ரத்து செய்துள்ளன. அதன்படி ராணுவ விமானங்கள் தவிர மற்ற விமானங்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே காபூல் நோக்கிய கிளம்பிய விமானங்களும் வளைகுடா நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுகின்றன. இதேபோல காபூலிலிருந்து துருக்கி செல்லும் விமானம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.