தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் கரோனாவிலிருந்து பாதுகாக்குமா? - புதிய ரிப்போர்ட்

பெய்ஜிங்: தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களைச் சரியான முறையில் பயன்படுத்தினால் முன்களப் பணியாளர்கள் கரோனாவால் பாதிக்கப்படுவது குறையும் என்று புதிய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

PPE prevents COVID 19
PPE prevents COVID 19

By

Published : Jun 11, 2020, 5:59 PM IST

கோவிட்-19 பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது. அதிக பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதால், அவர்களுக்குச் சிகிச்சையளிக்க அதிகளவிலான சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

இதன் காரணமாக சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்குத் தேவைப்படும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மறுபுறம் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களும்கூட கரோனாவிலிருந்து முன்களப் பணியாளர்களைப் பாதுகாக்காது என்ற செய்தியும் பரவிவருகிறது.

இந்நிலையில், சீனாவிலுள்ள சன் யாட்-சென் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தினால் கரோனா பரவும் வாய்ப்பு குறைவு என்று தெரியவந்துள்ளது. சீனாவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 116 மருத்துவர்கள், 304 செவிலியர் உள்பட 420 சுகாதாரப் பணியாளர்கள் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் வூஹான் மாகாணத்தில் ஜனவரி 24ஆம் தேதி முதல் ஏப்ரல் 7ஆம் தேதி வரை கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையளித்துள்ளனர்.

இவர்களுக்குத் தேவையான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களுக்கு வழங்கப்பட்டு, அதை எவ்வாறு முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்ற பயிற்சியும் அளிக்கப்பட்டது. இந்நிலையில், அவர்கள் வூஹானில் இருந்தவரை அவர்கள் கரோனா தொடர்பான எவ்வித அறிகுறிகளும் தென்படவில்லை. வீடுகளுக்குச் செல்லும்போது அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிலும் அவர்களுக்கு கரோனா பரவவில்லை என்று தெரியவந்துள்ளது.

மேலும், இந்தச் சுகாதாரப் பணியாளர்கள் அனைவரும் தங்கள் வீடுகள் இருக்கும் நகரத்தைவிட்டு வெளியே இருக்கும் நகரத்தில் பணிபுரிந்துள்ளனர். இதன்மூலம் மருத்துவமனைக்கு வெளியே மற்றவர்களுடன் தொடர்புகொள்ளும் வாய்ப்புகளும் இவர்களுக்கு குறைவாக இருந்தது.

இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களைச் சரியான முறையில் பயன்படுத்தினால், முன்களப் பணியாளர்கள் கரோனாவால் பாதிக்கப்படுவது குறையும் என்றே தங்கள் ஆய்வுகளில் தெரியவருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 'எங்க சேவையை நீங்க பயன்படுத்தக் கூடாது' -காவல் துறைக்கு தடைபோட்ட அமேசான்!

ABOUT THE AUTHOR

...view details