பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தங்களுக்கு மிகவும் பிடித்த நபர்களுடன் புகைப்படம் எடுப்பது, கை குலுக்குவதை பெருமையாக நினைப்போம். அதைப் போல், அபுதாபியின் இளவரசர் ஷேக் முகமது பின் சயீத், நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, வரிசையாக நின்ற பல சிறுவர்களுடன் கை குலுக்கினார்.
அப்போது, இளவரசர் வருவதைப் பார்த்து ஆசையாக வரிசையில் நின்று கை நீட்டிய சிறுமியை கவனிக்காமல் இளவரசர் சென்று விட்டார். இந்த காணொலி சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியதையடுத்து, இளவரசர் ஷேக்கின் கவனத்திற்குச் சென்றுள்ளது.