வளர்ச்சியின் பாதையில் வளர்ந்த நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு தடுப்பூசி வழங்குதல், கொசு கடியிலிருந்து குழந்தைகளை பாதுகாத்தல், தவறாமல் பள்ளிக்கு அனுப்புதல். குழந்தைகளுக்கு சிறந்த படிப்புக்கான ஆர்வத்தை மேம்படுத்துதல் இவை அனைத்தும் மிகவும் பொதுவானவை, இவை வளரும் நாடுகளுக்கு முக்கிய சவால்களாக இருக்கிறது. இந்த சவால்களுக்கான சரியான பதில்களை நாம் பெறாத வரை லட்சக்கணக்கான குழந்தைகள் நோய்களால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து ஆராய்ந்து மூன்று சிறந்த பொருளாதார விஞ்ஞானிகள் ஆழ்ந்த தீர்வுகளைக் கண்டறிந்துள்ளனர்.
மனித முன்னேற்றத்திற்கு வழிவகுக்க தீர்வுகளைக் கண்டறிந்த காரணத்திற்காக மதிப்புமிக்க நோபல் பரிசு மூவருக்கு வழங்கப்பட்டது. இதில் அபிஜித் பானர்ஜி இந்தியராவார். இவர் கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரி மற்றும் டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் படித்தார். உலகத்தில் வறுமையை ஒழிப்பதற்கான சிறந்த தீர்வுகளை படிப்படியாக ஆராய்ந்தார். இது நம் தேசத்திற்கு உண்மையான பெருமை. உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளும் முற்றிலும் சந்தை அடிப்படையிலான முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கைகளை செயல்படுத்துகின்றன. இப்போது இந்த முக்கியமான காலகட்டத்தில் பல நாடுகளில் உள்ள அரசாங்கங்கள் படிப்படியாக, நேரடியாக நன்மை தரும் மானியங்கள் மற்றும் சலுகைகள் உள்ளிட்ட திட்டங்களிலிருந்து விலகி வருகின்றன. ஏழைகளின் வாழ்க்கையை மாற்றுவதற்கான புதிய வழிகளை ஆராய்ச்சி செய்து பரிந்துரைத்ததற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியாகவும் பாராட்டத்தக்கதாகவும் இருக்கிறது.
தீர்க்கும் உத்திகள்:
யதார்த்தத்தில் பாரம்பரியமான பொருளாதார கொள்கைகள் ஏழைகளின் வறுமையை போக்குவதிலும், வாழ்க்கையின் வெவ்வேறு அம்சங்களைப் பகுப்பாய்வு செய்வதிலுமே தோல்வியடைகின்றன. ஏழைகள் மற்றும் வறுமை நிலை பற்றி விரிவான முறையில் அபிஜித்தின் குழு ஆராய்ந்து அறிந்துள்ளது. வறுமையின் அடிப்படை பிரச்னைகளுக்கு வலுவான ஆதாரங்களுடன் ஆழமான தீர்வுகள் கண்டுபிடிக்கப்பட்டன. சுகாதாரம், கல்வி நுகர்வு மற்றும் பொருளாதார வளர்ச்சி, செலவு இதற்கான தீர்வுகள் யதார்த்தமான கண்ணோட்டத்துடன் கண்டுபிடிக்கப்பட்டன. தத்துவார்த்த வாதங்களுக்கு அப்பாற்பட்டு உண்மையான வாழ்க்கையை அவைகள் பிரதிபலிப்பதாக உள்ளது. அவர்களின் இந்த முயற்சி பாராட்டுகளை பெறுவதோடு புதிய சமூகத்தை செயல்படுத்துவதில் மிகவும் நல்ல முடிவுகளைத் தருகிறது.
abhijit banerjee with his wife அபிஜீத், டஃப்லோவின் ’புவர் எகனாமி’ புத்தகம் நம்பகத்தன்மையைப் பெற்று, வறுமை மற்றும் ஏழை மக்களின் உண்மையான வாழ்க்கைத் தரங்களைப் பற்றி புரிந்துகொள்ள உதவியாக உள்ளது. அவரின் புத்தகத்தில் ஏழை மக்களின் செலவு மற்றும் ஆசைகளின் மூலக் காரணங்களை நியாயமான முறையில் அவர் விளக்கியுள்ளார். அவர்களின் வருமானம் குறிப்பிட்ட நிலைக்கு உயர்த்தப்படும்போது, சத்தான உணவு மற்றும் சுகாதார காப்பீட்டிற்கான செலவு செய்யாமல், அதற்கு பதிலாக ஏன் தொலைக்காட்சி போன்றவற்றை வாங்க விரும்புகிறார்கள் என்ற அந்த மூலோபாயத்தின் பின்னால் உள்ள காரணங்களை ஆராய்ந்துள்ளது. மொத்தமாக அந்த புத்தகத்தில் அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளனர்.
வறுமை ஒரு சமூக நோய், இந்த உலகில் எந்தவொரு நோயையும் சரியான நேரத்தில் சரியான சிகிச்சையை அளிப்பதன் மூலம் குணப்படுத்த முடியும். இதேபோல் சரியான ஆய்வின் மூலம் வறுமை மற்றும் கல்வியறிவின்மை போன்ற பல்வேறு சமூக மற்றும் பொருளாதார சிக்கல்களுக்கான சரியான தீர்வுகளைப் பெற முடியும். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே ஒரு புதுமையான மற்றும் வித்தியாசமான மூலோபாயத்துடன் சோதனைகள் செய்து நோபல் பரிசு பெற்றார்கள்.
nobel prize laureate abhijit banerjee ஒரே பொருளாதார பின்னணியுடைய குறிப்பிட்ட நபர்களை தேர்ந்தெடுத்து, அவர்களை இரு குழுக்களாக பிரிப்பார்கள். அதில் ஒரு குழுவுக்கு விலையில்லாமல் அடிப்படை தேவைகள் அளிக்கப்படும், மற்றொரு குழுவுக்கு இதுபோன்ற விஷயங்கள் எதையும் அளிக்கமாட்டார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு இரு குழுக்களின் சுகாதாரம், பொருளாதார முடிவு ஆய்வு செய்து முடிவு காணப்படும்.
அப்துல் ஜமீல் வறுமை ஒழிப்பு ஆய்வு மையம் உலகத்திலிருந்து வறுமையை ஒழிப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. ஆர்டிசி முறை மூலம் எம்ஐடியில் அபிஜித் பானர்ஜி மற்றும் அவரது மனைவி டஃப்லோ ஆகியோர் பல வளரும் நாடுகளில் வறுமையை ஒழிப்பதற்கும் அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றனர். கொசு கடிப்பதைத் தவிர்ப்பதற்கு கொசு வலைகளைப் பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு கொடுத்தது மட்டுமல்லாமல் அவற்றை விநியோகித்து மலேரியாவிலிருந்து 45 மில்லியனுக்கும் அதிகமான மக்களை காப்பாற்றினர். இது நிச்சயமாக ஒரு பெரிய விஷயம். இதனால் ஆப்பிரிக்க பள்ளிகள் பெரிய அளவில் தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி பெற்றன. எதிர்பாராத விதமாகவும், பிரமாண்டமாகவும் குழந்தைகளின் வருகை அளவை உயர்த்தியது.
பயனாளிகள் பெற வேண்டிய தானியங்களின் வகைகள் மற்றும் அளவு பற்றிய அச்சிடப்பட்ட தகவல்களை விநியோகித்ததன் மூலம் இந்தோனேசியா உணவு விநியோக அமைப்பில் ஊழலைக் கணிசமாகக் கட்டுப்படுத்த முடிந்தது. இதன்மூலம் உணவு விநியோகம் மற்றும் நுகர்வு ஆகியவை மேம்பட்டது, ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பரிகார பயிற்சி திட்டத்திலிருந்து பயனடைந்தனர். ராஜஸ்தானில் தடுப்பூசி போட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கூழ் இலவசமாக வழங்கப்படுகிறது. இதனால் தடுப்பூசி போடப்பட்ட சதவிகிதம் ஐந்திலிருந்து 40ஆக உயர்ந்தது. பீகாரில், உயர் இரும்பு சத்துள்ள உப்பு , பெரிய அளவில் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இது மதிய உணவு திட்டத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது, அதன் விளைவாக ரத்த சோகை பிரச்னைகள் பெரும்பாலானவை தவிர்க்கப்பட்டது.
economist winner abhijit banerjee குழந்தைகளில் ஊட்டச்சத்து உட்கொள்ளல் அதிகரித்து வருவதை அவர்கள் தெளிவாக நிரூபித்துள்ளனர். குழந்தைகளின் உயரம் மற்றும் எடையில் தரமான மாற்றங்கள் காணப்படுகின்றன. நேரடி பணப் பரிமாற்றம் போன்ற நன்மை பயக்கும் திட்டங்களை போல் நம்பத்தகுந்தவை என்பதை நிரூபித்தன இந்த வகையான வளர்ச்சித் திட்டங்கள். இந்த திட்டங்களால் உற்பத்தி செய்யாத நுகர்வு அதிகரிப்பு மற்றும் உழைப்பில் சோம்பல், தொழிலாளர் சக்தியைக் குறைப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என நோபல் பரிசு பெற்றவர்களால் உறுதியாக கூறப்பட்டுள்ளது. இந்த வகையான வளர்ச்சித் திட்டங்களை பயன்படுத்துவதன் மூலம் நீண்ட காலத்திற்கு உற்பத்தித் திறன் பெரிய அளவில் அதிகரிக்கும் என்று அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர். ஏழைகளுக்கு கிடைக்கும் ஒவ்வொரு கூடுதல் ரூபாயும் பொருளாதாரத்தில் உற்பத்தி அதிகரித்து, அதனால் பொருளாதார வளர்ச்சி ஏற்படுகிறது. இந்த வளர்ச்சியின் விளைவாக சமூகத்தில் வளர்ச்சி அம்சங்கள் அதிகரிக்கும் என்று அவர்களின் ஆராய்ச்சியின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
-டாக்டர் சிரால சங்கர் ராவ் (எழுத்தாளர் - நிதி நிபுணர்)