பிலிப்பைன்ஸ் நாட்டின் C-130 என்ற ராணுவ விமானம் இன்று (ஜூலை.04) காலை விபத்துக்குள்ளானது.
அந்நாட்டின் தெற்கே உள்ள சுலூ பகுதியிலிருந்து புறப்பட்ட விமானம், ஓடுதளப் பாதையிலிருந்து விலகியதில் விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானத்தில் 92 பேர் இருந்ததாகவும், அவர்களில் பெரும்பாலானோர் ராணுவத்தினர் எனவும் முதற்கட்டத் தகவல் தெரிவிக்கின்றன.
மீட்புப் பணிகளில் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 40 பேர் காயங்களுடன் மீட்டகப்பட்டுள்ளதாகவும் ராணுவ செயலர் டெல்பின் லோரேன்சா தெரிவித்துள்ளார்.
மீதமுள்ள நபர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் ராணுவத் தளபதி சிரிலிடோ சோபேஜனா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:பாம்புகளுடன் பயமில்லா வாழ்க்கை