தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஆப்கான்: 24 மணி நேரத்தில் 94 தலிபான், அல்கொய்தா பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! - ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள்

ஆப்கானிஸ்தான் ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 94 தலிபான், அல்கொய்தா பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆப்கான் தாக்குதல்
ஆப்கான் தாக்குதல்

By

Published : Aug 6, 2021, 11:44 AM IST

காபூல்:ஆப்கானிஸ்தான் நாட்டின் லஷ்கர் காஹ் நகரில் ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. கடந்த 24 மணி நேரமாக நடைபெற்ற இந்த மோதலில், 94 தலிபான், அல்கொய்தா பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். 16 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து, ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஃபவாத் அமன், "ஹெல்மாண்ட் தலிபானின் ரெட் யூனிட் கமாண்டர் மவ்லவி முபாரக் தலைமையிலான பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், மவ்லவி முபாரக் உள்பட 94 தலிபான், அல்கொய்தா பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

கடந்த சில வாரங்களாக ஆப்கானில் வன்முறை அதிகரித்திருப்பதால், பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.

பயங்கரவாதிகளால் கொல்லப்படும் பொதுமக்களின் எண்ணிக்கையும் = ஆப்கானில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஜம்மு காஷ்மீரில் என்கவுன்டர்: வீழ்த்தப்பட்ட பயங்கரவாதி

ABOUT THE AUTHOR

...view details