இது குறித்து பேசிய இந்தோனேஷிய காவல் துறை உயர் அலுவலர் முகமது ஜமில், "ஆச்சே மாகாணம் அருகே இந்தியப் பெருங்கடலில் பாழடைந்த படகு ஒன்றில் 49 பெண்கள், 30 குழந்தைகள், 15 ஆண்கள் என 94 ரோஹிங்கியா இன மக்கள் தவித்துவந்ததை மூன்று மீனவர்கள் கண்டுள்ளனர்.
மீனவர்களைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் துள்ளியெழுந்த அவர்கள் தங்களைக் காப்பாற்றுமாறு கூறி, மீனவர்கள் சென்ற மீன்பிடிப் படகில் ஏறியுள்ளனர். ஆனால், அந்த மீன்பிடிப் படகின் இன்ஜின் செயலிழந்ததால் படகு கரைக்கு வர முடியாமல் போனது.
இதையடுத்து, எங்களுக்கு (காவல் துறை) அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் அங்கு சென்று நாங்கள் அவர்களுக்கு உணவு, தண்ணீர் கொடுத்தோம். கரையோர கிராமங்களைச் சேர்ந்த மக்கள் உடைகளைத் தானமாகக் கொடுத்தனர்.