துபாய் டியூட்டி ஃப்ரீ ஜாக்பாட் போட்டி 1999ஆம் ஆண்டு முதல் துபாய் விமான நிலையத்தில் நடைபெற்றுவருகிறது. இதில் மும்பையைச் சேர்ந்த ஒருவர், 19 வருடங்களாக துபாயில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், இந்த ஜாக்பாட் போட்டியில் 2004ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பங்கேற்று வந்துள்ளார்.
9 வயது இந்திய சிறுமிக்கு அடித்தது ஜாக்பாட்! - Dubai
துபாய் : துபாய் டுயூட்டி ஃப்ரீ மில்லினியம் மில்லியனர் போட்டியில் இந்தியாவின் 9 வயது சிறுமி எலிசா ஒரு மில்லியன் டாலர் பரிசு வென்றுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வருடம் இவருடைய மகள் எலிசாவின் பெயரில் ஒரு டிக்கெட்டை வாங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து, துபாய் டியூட்டி ஃப்ரீ ஜாக்பாட் போட்டியில் ஒரு மில்லியன் டாலர் பரிசு விழுந்துள்ளது. இதற்கு முன்னதாக 2013ஆம் ஆண்டு இதே ஜாக்பாட் போட்டியில் ஒரு மெக்லாரன் கார் பரிசாக வென்றுள்ளார்.
இந்தப் பரிசைப் பெறும் 140ஆவது இந்தியர் என்ற பெருமையை 9 வயது இந்திய சிறுமி எலிசா பெற்றுள்ளார். இந்திய சிறுமிக்கு இரண்டு முறை துபாய் ட்யூட்டி ஃப்ரீ மில்லியனர் பரிசு விழுந்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதேப் போட்டியில் மற்றொரு இந்தியரான முகமது ஹனீஃப் ஆடம் ஸ்கவுட் பாபர் என்னும் அழகிய இருசக்கர வாகனத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.