ஷாங்காய் நகரிலுள்ள மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான கட்டடம் திடீரென சரிந்து விழுந்தது. உள்ளூர் நேரப்படி காலை 11.30 மணிக்கு நடைபெற்ற இந்த விபத்தில், கட்டட இடிபாடுகளில் பலர் சிக்கி கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் 11 பேரை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சீனாவில் கட்டடம் சரிந்து விபத்து - இடிபாடுகளில் சிக்கிய 9 பேர்! - debris
பெய்ஜிங்: சீனாவின் ஷாங்காய் நகரில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கட்டிடம் சரிந்து விழுந்ததில் இடிபாடுகளில் ஒன்பது பேர் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இடிபாடுகளில் சிக்கிய 9 பேர்
இந்நிலையில், ஒன்பது பேர் கட்டட இடிபாடுகளில் கிக்கியுள்ளதாக அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.