தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 21, 2019, 11:56 AM IST

ETV Bharat / international

கொழும்புவில் 80 சதவீத கட்டட தொழிலாளர்கள் போதைக்கு அடிமையாகி உள்ளனர்!

கொழும்பு: இலங்கையில் 80 சதவீத கட்டட தொழிலாளர்கள் போதைக்கு அடிமையாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

80 சதவீத கட்டட தொழிலாளர்கள் போதைக்கு அடிமையாகி உள்ளனர்

தெற்கு ஆசிய நாடான இலங்கையில் நாளுக்கு நாள் போதை பழக்கம் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க காவல்துறை தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், தலைநகர் கொழும்புவில் இளைஞர்கள் பலரும் போதைக்கு அடிமையாகியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கட்டட தொழிலாளர்கள் 80 சதவீத பேர் போதை பொருள்களை அதிகளவில் பயன்படுத்துவதாக அங்கிருந்து வரும் தகவல் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக பேட்டியளித்துள்ள மருந்துகள் தடுப்பு பிரிவின் இயக்குநர் டாக்டர். சாமான்தா கிடாலகாமா, " 10 ஆயிரம் கட்டட தொழிலாளர்கள் உள்ள கொழும்புவில் ஆயிரம் பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். இவர்களில் 80 சதவீத நபர்கள் போதைக்கு அடியாகி உள்ளனர். தொழிலாளர்கள் தங்களது நண்பர்களுக்கு இந்த போதையை அறிமுகப்படுத்துகின்றனர். இதன் மூலம் போதை பழக்கம் படிபடியாக பரவ தொடங்கியது " என்றார்.

அதிக சுமை கொண்ட பணிகளை தொழிலாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக கட்டட உரிமையாளர்கள் போதை பொருட்களை விநியோகிப்பதாக புகார் எழுந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details