பாகிஸ்தானின் சட்லஜ் நதியில் 40 பேருடன் கப்பல் ஒன்று பயணித்துள்ளது. அந்த கப்பல் மல்ஹு ஷெய்கா பகுதியைக் கடந்து செல்கையில் எதிர்பாராவிதமாக விபத்தில் சிக்கியது.
சட்லஜ் நதியில் ஏற்பட்ட கப்பல் விபத்து; 8 பேர் உயிரிழப்பு! - உடல்கள் மீட்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் ஒகாரா மாவட்டத்தின் இடையே செல்லும் சட்லஜ் நதியில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் சிக்கிய மற்ற பயணிகளின் உடல்கள் தேடப்பட்டு வருகிறது. இதுகுறித்து காவல்துறையினர் பேசுகையில், இதுவரை 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகிறது. உள்ளூர் மக்களின் உதவிகளையும் கேட்டுள்ளோம். விரைவில் பயணிகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.
இதையும் படிங்க: நான்கு மாத குழந்தை ரூ. மூன்று லட்சத்திற்கு விற்பனை - சேலத்தில் அவலம்!