காபூல்:ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபன்கள் தாக்குதல் நடத்தி ஆட்சியைப் பிடித்துவிட்டனர்.
தற்போது, அதிபர் மாளிகை இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதன் காரணமாக, ஆப்கான் உள்ளிட்ட பல்வேறு நாட்டு மக்கள் அங்கிருந்து தப்பித்துச் செல்ல காபூல் விமான நிலையத்தில் குவிந்துவருகின்றனர்.
ஆப்கான் விமானநிலையத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் அமெரிக்கா
இதனிடையே, காபூல் விமான நிலையம் முடக்கப்பட்டது. தற்போது, விமானநிலையம் ஆப்கானில் மீதமுள்ள அமெரிக்க ராணுவப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இவர்கள், விமான நிலையத்தில் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதனால் ஐந்து பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.