தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பாகிஸ்தான் ராணுவத்தில் புகுந்த கொரோனா! - கோவிட் 19

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டிலுள்ள எட்டு ராணுவ வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Coronavirus in Pakistan
Coronavirus in Pakistan

By

Published : Mar 13, 2020, 11:43 PM IST

சீனாவில் தற்போது கோவிட் 19 (கொரோனா) வைரஸ் தொற்று குறைந்துவந்தாலும் மற்ற நாடுகளில் வைரஸின் தாக்கம் தற்போதுதான் தீவிரமடைந்துள்ளது. இந்த வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அரசுகள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானிலுள்ள எட்டு ராணுவ வீரர்களுக்கு கோவிட் 19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் சுகாதார துறை அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில், "மூன்று லெப்டினன்ட் கர்னல், இரண்டு கர்னல்கள், ஒரு மேஜர் ஜெனரல் உள்ளிட்ட எட்டு பேருக்கு கோவிட் 19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் கோவிட் 19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பாகிஸ்தானில் 28ஆக உயர்ந்துள்ளது. அந்நாட்டில் இதுவரை எட்டு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 471 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதையும் படிங்க: இந்தியாவுடன் கைகோர்க்கும் பாகிஸ்தான்
!

ABOUT THE AUTHOR

...view details