ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாக தலிபான் பிரதிநிதிகள், அமெரிக்க அலுவலர்கள் இடையே கத்தார் தலைநகர் தோஹாவில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
தலிபான் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் பலி! - bomb blast
காபூல்: ஆப்கானிஸ்தானின் காஸ்னி மாகாணத்தில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தபட்சம் எட்டு பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
8 பேர் பலி
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் மத்திய பகுதியில் அமைந்துள்ள காஸ்னி மாகாணத்தில் தலிபான் பயங்கரவாதிகள் காரில் நிரப்பப்பட்ட வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர்.
உளவு மையத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.