மேலும் அங்கு பயிலும் குழந்தைகளுக்கு எந்தவித அடிப்படைக் கல்வி தேவைகளும் பூர்த்திசெய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டில் இதுவரையில் 15 ஆயிரத்து 750 பேர் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 265 பேர் இந்நோயால் மரணமடைந்துள்ளனர்.
7 மில்லியன் ஆப்கன் குழந்தைகளின் வாழ்வாதாரத்தை சிதைத்த கரோனா! - Afghanistan Kids
காபூல்: கரோனா நோய்க்கிருமி ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக ஆப்கானிஸ்தானில் ஏழு மில்லியன் குழந்தைகள் உணவின்றித் தவித்துவருவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்நாட்டின் மக்கள் தொகையில் 50 விழுக்காடு அளவிற்கு 15 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் என்று ரைட்ஸ் குழுமம் தெரிவித்துள்ளது.
குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருப்பதாக ஐநா வருத்தம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், ஆப்கானிஸ்தான் மனித உரிமைகள் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் நயீம் நசாரி, "அரசின் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் கல்வி, குழந்தை திருமணங்கள், பாலியல் வன்கொடுமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் குழந்தைகளின் நிலைமை மிகவும் சிக்கலானது, ஏற்றுக்கொள்ள முடியாத அளவில் இருக்கிறது" என்று கூறினார்.
ஆப்கானிஸ்தான் குறித்து தரவு நிறுவனம் ஒன்று வெளியிட்ட அறிக்கையில் நாட்டின் மக்கள் தொகையில் 50 விழுக்காடு அளவு 15 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.