தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஹிரோஷிமா அணு ஆயுதத் தாக்குதலின் 75ஆம் ஆண்டு - கற்க வேண்டிய பாடம் என்ன? - SOCIETY FOR POLICY STUDIES

ஹிரோஷிமா அணு ஆயுதத் தாக்குதல் நடைபெற்று 75 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் சர்வதேச சமூகம் கற்க வேண்டிய பாடம் குறித்து சொசைட்டி பார் பாலிசி ஸ்டடீஸ் அமைப்பின் இயக்குநர் சி. உதயபாஸ்கர் எழுதிய சிறப்புக் கட்டுரையின் தமிழாக்கம் இதோ.

Japan
Japan

By

Published : Aug 6, 2020, 2:40 AM IST

Updated : Aug 6, 2020, 7:11 PM IST

ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பு துயரச் சம்பவம் நிகழந்து 75 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், 1945ஆம் ஆண்டுக்குப்பின் இதுபோன்ற அணுஆயுதத் தாக்குதல் கோரச்சம்பவம் அரங்கேறவில்லை என்ற ஒரே நிம்மதி மட்டுமே நம்மிடம் எஞ்சுகிறது. இந்த சம்பத்தில் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரதுக்கும் மேற்பட்ட ஜப்பானிய குடிமக்கள் கொல்லப்பட்டு, பலலட்சம் பேர் ஆறாத வடுவிற்கு ஆளானார்கள். மேகம் போல எழுந்த புகை மண்டலம் ஒட்டுமொத்த ஹிரோஷிமா நகரை சுடுகாடாக மாற்றியது.

75 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், எத்தனையோ இக்கட்டான சூழலிலும் நகசாகிக்குப்பின் இதுபோன்ற சம்பவத்தை நடத்தவிடாமல் உலக நாடுகள் உறுதிகாத்துள்ளன. 1962ஆம் ஆண்டு க்யூபா ஏவுகனை விவகாரம், பின்னர் அமெரிக்கா-ரஷ்யா பனிப்போர் என பல குளறுபடிகளை உலகம் சந்தித்து குறிப்பிடத்தக்கது

ஆனால் இதே நிலையை உலக நாடுகள் அடுத்த ஐந்தாண்டுகளுக்குப் பின்னரும் தொடருமான என்ற சந்தேகம் எழத் தொடங்கியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மூன்றாம் தேதி ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்பு சபை வெளியிட்ட ரகசிய அறிக்கை இந்த சந்தேகத்தை வலுப்படுத்தும் விதமாக உள்ளது. அணுஆயுத தயாரிப்பை குறைத்துக்கொள்வதாக உறுதியளித்துவந்த வட கொரிய, மாறாக ஏவுகணை மூலம் செலுத்தப்படும் சிறிய ரக அனு ஆயுதங்களை தயாரித்துவருவதாக அந்த அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.

பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக உள்ள உலகின் சக்தி வாய்ந்த ஐந்து நாடுகள், பொருளாதார ரீதியான வல்லாதிக்கங்களான ஜீ -20 நாடுகள் அணு ஆயுதங்களை தற்பாதுகாப்பின் ஒரு அம்சமாக மட்டுமே வைத்துக் கொள்ளவேண்டும் என்ற கொள்கை முடிவை முடித்துள்ளன. எனவே இந்த ரகசிய அறிக்கை மேற்கண்ட அமைப்புகளில் முக்கிய விவாதத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக இந்தியா சேரவுள்ளது.

தேசப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்படும், பேரழிவை உருவாக்கும் ஆயுதங்கள், முதலில் கொள்முதல் செய்யப்பட்டு அவை அணு ஆயுதங்கள் அளவிற்கு மேம்படுத்தப்படுகின்றன. மற்றநாடுகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தாலும், உலக பெருந்சக்திகள் அணு ஆயுத எண்ணிக்கை குறித்த விவரங்களை ஒழுங்காக வெளியிடவில்லை. அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கும் வட கொரியவுக்கு இடையே ஏற்பட்டுள்ள முரணுக்கான காரணமும் இதுதான்.

பனிப்போர் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களை இரு நாடுகளும் உருவாக்கியிருந்தன. சோவித் ரஷ்யா உடைந்த பின்னர், இந்த அணு ஆயுத எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட்டன. அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் மட்டுமே அணு ஆயுதப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என விதிமுறை இருந்த நிலையில், 1974 ஆம் ஆண்டு இந்தியா அணு சோதனை நடத்தியது பெரும் விவாதத்தை கிளப்பியது.

1970ஆம் உருவாக்கப்பட்ட என்.பி.டி ஒப்பந்தத்தில் மேற்கண்ட ஐந்து நாடுகளைத் தவிர மற்ற நாடுகள் கையெழுத்து இட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்த நிலையில், பல நாடுகள் அதற்கு ஒத்துழைக்கவில்லை. ஆனால், இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, இஸ்ரேல், ஈராக், ஈரான், லிபியா ஆகிய நாடுகள் அணு ஆயுதங்கள் கொண்ட நாடாக உருவெடுத்தன. ஐந்து பெருஞ்சக்திகளின் கையிலிருந்த அணு ஆயுத சக்தி தேச பாதுகாப்பு, இறையாண்மை ஆகிய கோட்பாடுகள் மூலம் மேற்கொண்ட அனைத்து நாடுகளுக்கும் சென்றடைந்தது. இந்த அணு ஆயுத அதிகரிப்பைத் தடுக்க எந்த ஒப்பந்தமோ வழிமுறையோ ஏற்படுத்தப்படவில்லை.

கடந்த சில ஆண்டுகளில், அமெரிக்கா-ரஷ்யா இடையே மேற்கொள்ளப்பட்ட முக்கிய ஆயுத ஒப்பந்தங்கள் முறிக்கப்பட்டுள்ளன. 1987ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ஐ.என்.எஃப். ஒப்பந்தத்திலிருந்து 2019ஆம் ஆண்டு ட்ரம்ப் அரசு வெளியேறியது முக்கிய நகர்வாகும்.

இது குறித்து அமெரிக்க ஆயுதக் கட்டுப்பாட்டுத் துறையின் முக்கிய அதிகாரி தாமஸ் கன்ட்ரிமேன், ஐ.என்.எஃப். ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியதன் மூலம் அரை நூற்றாண்டு காலத்திற்குப் பின் முதல்முறையாக உலகின் இரு பெரும் அணு ஆயுத சக்திகள் சட்ட ரீதியான எந்தக் கட்டுபாடுகளும் இன்றி செயல்படும் சூழல் அமைந்துள்ளது என கவலை தெரிவித்துள்ளார்.

இதில் அபாயம்தரும் செய்தி என்னவென்றால், அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதல், மும்பை பயங்கரவாதத் தாக்குதல் போன்ற சர்வதேச பயங்கரவாத தாக்குதல்கள் அணு ஆயுதம் என்ற அடுத்த கட்டத்தை நோக்கி செல்கிறதோ என்பதே. அத்துடன் அமெரிக்கா - ரஷ்யா , அமெரிக்கா - சீனா போன்ற மோதல்களும் கவலை தருகின்றன.

வட கொரிய மட்டுமல்ல உலகின் எந்த நாடுகளும் பாதுகாப்பை காரணம் காட்டி அணுஆயுதத்தை அழிவின் பாதைக்கு கொண்டு செல்லக்கூடாது என்பதே ஹிரோஷிமா சம்பவத்தின் 75ஆம் ஆண்டு நினைவு தினத்தில் நாம் பெற வேண்டிய பாடம்.

Last Updated : Aug 6, 2020, 7:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details