இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் பங்கு
இரண்டாம் உலகப் போர் 1939ஆம் ஆண்டு முதல் 1945ஆம் ஆண்டு வரை நடைபெற்றது. சுமார் ஆறு ஆண்டுகள் நீடித்த இந்தப் பேரில் கோடிக் கணக்கான வீரர்கள் உயிரிழந்தனர். ஹிட்டலரை வீழந்த இரு துருவங்களாக இருந்த அமெரிக்காவும் ரஷ்யாவும் கைகோர்த்தன.
இந்தப் போரில்தான், அணு அயுதங்களில் கோரமான முகத்தை உலகம் பார்த்தது. அமெரிக்கா தான் உருவாக்கிய 'Litlle Boy','Fat man' என்ற இரண்டு அணு ஆயுதங்களை ஜப்பான் மீது உபயோகித்தது. இந்த அணு அயுதங்களின் பாதிப்பு ஜப்பானில் பல ஆண்டுகளும் கழித்தும் உணரப்பட்டது.
உலகப் போரில் ஜப்பான் கடந்த வந்த பாதை
1940ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகள் முத்தரப்பு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொன்டன. அதில் அவர்கள் ஏற்கனவே போரில் ஈடுபடாத ஒரு நாட்டை தாக்க வேண்டுமென்றால் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும் என்று ஒப்புக் கொண்டனர்.
அதன்படி அம்மாத இறுதியில், இந்தோ-சீனா பகுதியை பிரான்ஸ் ஆக்கிரமிக்க உதவியது. அந்நாட்டிற்கு உதவும் வகையில் ஜப்பான் தனது படைகளை அனுப்பியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜப்பானிற்கு எண்ணெய் மற்றும் எஃகு மீதான தடை உள்ளிட்ட பல பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்தது.
அத்தியாவசியப் பொருள்களை சீனாவுக்கு செல்வதைத் தடுக்கும் விதமாக 1940ஆம் ஆண்டுவடக்கு இந்தோ-சீனா பகுதிகளை ஜப்பான் ஆக்கிரமித்தது. அதைத்தொடர்ந்து 1941ஆம் ஆண்டு பிரான்சுடன் இணைந்து தனது இந்தோ-சீனா பகுதி தனது ஆளுகைக்கு கீழ்வரும் என்று அறிவித்தது. இது தென்கிழக்கு ஆசியா பகுதியில் ஜப்பானின் ஆதிக்கத்தை அதிகரிக்கும் விதமாகவும், மேலும் இப்பகுதியில் நகர்வதற்கான வழியை அமைத்தது.
இரண்டாம் உலக போரில் ஜப்பான் 1941ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி, ஹவாயில் அருகிலுள்ள பேர்ல் துறைமுகத்தில் உள்ள அமெரிக்க கடற் படை மீது ஜப்பான் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர்.
ஜப்பானின் இந்த திடீர் தாக்குதல் இரண்டாம் உலக போரையே தலைகீழாக புரட்டப்போட்டது. இந்தத் தாக்குதலுக்கு பின்னர்தான், அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் நேரடியாக களமிறங்கியது.
போரின் ஆரம்ப காலம்
போரின் ஆரம்ப ஆண்டுகள், ஜப்பானுக்கு பெரும் வெற்றியைக் கொடுத்தன. 1942ஆண் ஆண்டு பிலிப்பைன்ஸின் மணிலாவை ஜப்பான் படைகள் ஆக்கிரமித்தன. அதைத்தொடர்ந்து கோரெஜிடோர் தீவுகள், சிங்கப்பூர், டச்சு ஈஸ்ட் இண்டீஸ், ரங்கூன் (பர்மா) உள்ளிட்ட பகுதிகளிலும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டினர்.
ஆஸ்திரேலியாவுடன் தகவல்களை பரிமாறிக்கொள்வதில் நேச நாடுகள் பல சிக்கல்களை எதிர்கொண்டன. மேலும், அப்போது அதிநவீனப் கடற்படைகளாகக் கருதப்பட்ட பிரிட்டிஷ் கடற்படை நிறைய இழப்புகளை சந்தித்தது, இது ஜப்பானிய கடற்படைக்கு அதிக சுதந்திரத்தையும் நம்பிக்கையையும் அளித்தது.
நெருக்கடியை எதிர்கொள்ள தொடங்கிய ஜப்பான்
ஜப்பானின் அப்போதைய பிரதமராக இருந்த டிஜே அந்நாட்டின் மக்களிடையே நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தார்.மேலும், தன்னை பாசிச தலைவர் போல ஓரளவு காட்டிக்கொள்ள தொடங்கினார். இருந்தாலும்கூட, அவரால் அமெரிக்க கடற்படையை தென் பசிபிக் பகுதியிலிருந்து நிரந்தரமாக விரட்டமுடியவில்லை.
ஆனால் அதன் பின் நடந்த நிகழ்வுகள் ஜப்பானுக்கு மகிழ்ச்சிகளை அழிக்கும் வகையில் இல்லை.
1942ஆம் ஆண்டு ஜூன், மிட்வே பகுதியில் நடைபெற்ற போரில்(Battle of Miday) நான்கு விமானம் தாங்கி போர் கப்பல்களை ஜப்பான் இழந்தது. இதுமட்டுமின்றி பல அனுபவம் வாய்ந்த விமானிகளும் இந்தப் போரில் உயிரிழந்தனர்.
மேலும், 1943ஆம் ஆண்டு சாலமன்ஸில் உள்ள குவாடல்கனல் தீவுகளில் நடைபெற்ற போரில் ஜப்பான் தனது படைகளை திரும்பப் பெற்றுக் கொண்டது.
1944ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இந்த போரை நம்மால் வெல்ல முடியாது என்பதை ஜப்பானின் ராணுவத் தலைவர்கள் உணரத் தொடங்கினர். இருப்பினும் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களில் மீது அணுகுண்டுகள் வீசப்படும் வரை போரிடுவதை ஜப்பான் நிறுத்திக்கொள்ளவில்லை.
ஐவோ ஜிமா போர் (பிப்ரவரி 19, 1945 - மார்ச் 26, 1945)
ஐவோ ஜிமா தீவுகளை கைப்பற்ற அமெரிக்கா மற்றும் ஜப்பான் படைகளிடையே போர் நடைபெற்றது. பல மாதங்களாக இந்த தீவு மீது ஷெல் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்திய அமெரிக்க படைகள், இறுதியாக படையெடுப்பு நடவடிக்கைளில் ஈடுபட்டன. 36 நாள்கள் நடைபொற்ற இந்தப் போரில் ஏறக்குறைய ஏழாயிரம் அமெரிக்க வீரர்களும் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட ஜப்பானிய வீரர்களும் உயிரிழந்தனர். இந்தப் போருக்குப் பின், அமெரிக்காவின் குண்டுவீசும் விமானங்களுக்கான அவசர தரையிறங்கும் தளமாக இத்தீவு செயல்பட தொடங்கியது.
மார்ச் 10, 1945 - டோக்கியோ மீது தொடங்கப்பட்ட வான்வழித் தாக்குதல்:
ஜப்பான் தலைநகர் டோக்கியோ மீது அமெரிக்கா மிகப் பெரியளவில் குண்டு வீசி தாக்கதல் நடவடிக்கைகளை மேற்கொண்டன. இரண்டு நாள்களில் இரண்டாயிரம் டன்களுக்கும் அதிகமான வெடிமருந்துகள் டோக்கியோவில் போடப்பட்டது. இதில் மட்டும் 80,000 முதல் ஒரு லட்சம் பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று கணக்கப்பட்டது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து 64 ஜப்பான் நாடுகள் மீது வான்வழித் தாக்குதல் நடைபெற்றது.
ஒகினாவா போர்(ஏப்ரல் 1, 1945 - ஜூன் 22, 1945):
ஜப்பான் படைகளை எதிர்கொள்ள லட்சக்கணக்கான வீரர்கள் ஒகினாவாவுக்கு அமெரிக்கா அனுப்பியது. இந்த தீவுை பசிபிக் பகுதியில் மிக முக்கிய விமானத் தளமாக நேச நாடுகள் கருதின. இந்த போர் ஐவோ ஜிமா போரைவிட அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.
14,000க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்களும் 70 ஆயிரம் ஜப்பான் வீரர்களும் இந்தப் போரில் கொல்லப்பட்டனர். ஒகினாவாவின் மக்கள்தொகையில் மூன்றில் ஒருவர் அப்பகுதிில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தனர்.
இத்தீவின் முக்கியத்துவத்தை அமெரிக்கா நன்றாகவே உணர்ந்திருந்தது. அப்போதைய அமெரிக்க அதிபர் ஹாரி எஸ். ட்ரூமன், இத்தீவை அணு ஆயுதப் பயன்பாடுகளைச் சோதிக்க உபயோகிக்க அனுமதியளித்தார், அதைத்தொடர்ந்து 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி லிட்டில் பாய் என்ற அணுகுண்டு ஜப்பானின் ஹரிரோஸ்மா மீது போடப்பட்டது.
அதன் பின் இரண்டு நாள்கள் கழித்து ஜப்பான் மீது ரஷ்யாவும் போரை அறிவித்தது.
1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி நாகசாகியில் ஃபேட் மேன் என்ற அணுகுண்டை அமெரிக்கா பயன்படுத்தியது. அதன்பின் ஒரு மாத்திற்குள், அதாவது செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி சரணடைவதாக ஜப்பான் அறிவித்தது.
இரண்டாம் உலக போரில் ஜப்பான் போர் குற்ற விசாரணை
இரண்டாம் உலகப் போரின்போது நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்த விசாரணை டோக்கியோவில் இருக்கும் சர்ந்தேச ராணுவ தீர்பாயத்தில் 1946ஆம் ஆண்டு முதல் நவம்பர் 1948 வரை நடந்தன.
இது தொடர்பாக 28 ஜப்பான் ராணு உயர் அலுவலர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணை நடைபெற்றது.
1948ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி விசாரணை முடிவுக்குவந்தது. அதில் குற்றஞ்சாட்டப்பட்ட 28 பேரில் 25 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். மற்ற மூவரில் இருவர் உயிரிழந்துவிட்டார், ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.
போரின் போது ஜப்பானிய பிரதமராக இருந்த ஜெனரல் டோஜோ உள்ளிட்ட ஏழு பேருக்கு ராணுவ தீர்பாயம் மரண தண்டனை விதித்தது. இதுபோக 16 போருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது.
இதேபோல பல்வேறு நாடுகளில் நடைபெற்ற விசாரணையில் சுமார் ஐந்தாயிரம் ஜப்பானியர்கள் போர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர், அவர்களில் சுமார் ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.