தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஆப்கன் வான்வழித் தாக்குதலில் 7 பயங்கரவாதிகள் உயிரிழப்பு - பயங்கரவாதிகள் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் நேற்று நடந்த வான்வழித் தாக்குதலில் ஏழு தலிபான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், அவர்களின் ஆயுதங்கள் அழிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

7 Taliban terrorists killed in airstrike in Afghanistan's Balkh province
7 Taliban terrorists killed in airstrike in Afghanistan's Balkh province

By

Published : Dec 26, 2020, 4:33 PM IST

பால்க்: ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத்தின் உள்ள சோம்டால் மாவட்டத்தில் நேற்று (டிச. 25) நடைபெற்ற வான்வழித் தாக்குதல் நடைபெற்றது.

இந்தத் தாக்குதலின் விளைவாக பால்க் மாகாணத்தின் சோம்தால் மாவட்டத்தில் 7 தலிபான்களும், பாலா போலோக் மாவட்டத்தில் எட்டு பேரும் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பாக ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "பால்க் மாகாணத்தின் உள்ள சோம்டால் மாவட்டத்தில் நேற்று வான்வழித் தாக்குதல் நடைபெற்றது.

இதில் 7 தலிபான் கொல்லப்பட்டனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். தாக்குதலின்போது அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் ஏராளமானவை அழிக்கப்பட்டன" என்று குறிப்பிட்டுள்ளது.

மற்றொரு ட்விட்டர் பதிவில், "ஃபரா மாகாணத்தின் பாலா போலோக் மாவட்டத்தில் மேலும் 8 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மூன்று பேர் காயமடைந்தனர், அவர்கள் பயன்படுத்திய பொருள்களும் அழிக்கப்பட்டன" எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:'4 மாதங்களில் ஆப்கன் படையைச் சேர்ந்த 3,560 பேர் கொல்லப்பட்டுள்ளனர்'

ABOUT THE AUTHOR

...view details