ஜகார்த்தா:இந்தோனேசியாவின் கிழக்கே உள்ள நுசா தெங்கரா மாகாணத்தில் இன்று 7.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. இதன்காரணமாக இந்தோனேசியாவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இந்த நிலநடுக்கம் மொவ்மேர் நகரத்தில் இருந்து 100 கி.மீ. தொலைவில் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக 18.5 கி.மீ. ஆழத்தில் ப்ளோரஸ் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், இதுவரை குறிப்பிடத்தக்க சேதமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. லாரன்டுகாவின் சில பகுதிகளில் மட்டும் உணரப்பட்டதாக, அலுவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.