தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! மீண்டும் சுனாமியா? - newzealand

வெலிங்டன்: நியூசிலாந்தின் கெர்மாடெக் ( Kermadec) தீவுகளுக்கு அருகே 7. 4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

new zealand

By

Published : Jun 16, 2019, 12:26 PM IST

பசிபிக் நாடுகளில் ஒன்றான நியூசிலாந்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது கெர்மாடெக் தீவுகள்.

இந்நிலையில், இந்த தீவுகளுக்கு அருகே, நேற்று இரவு சுமார் 9.6 கி.மீ. ஆழத்தில் 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியிலிருந்து சுமார் 300 கி.மீ. தொலைவுக்குட்பட்ட பகுதிகளில் அபாயகரமான சுனாமி வருவதற்கு வாய்ப்புள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதைத்தொடர்ந்து, அந்த எச்சரிக்கையானது திரும்பப்பெறப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் இதுவரை எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை.

ABOUT THE AUTHOR

...view details