பாசப்போராட்டம்
தாய்லாந்தில் 'காஹோ யாய்' என்ற தேசியப் பூங்கா இருக்கிறது. இங்கு யானைகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வாழ்கின்றன. இந்த பூங்காவைப் பொறுத்தவரை நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்தப் பூங்காவுக்குள் ஹயூ நிரோக் என்ற நீர்வீழ்ச்சி இருக்கிறது. இந்த நீர்வீழ்ச்சியில் இன்று அதிகாலை 3 மணி அளவில் யானைகளின் சத்தம் கேட்டுள்ளது. பின்னர் காலை 6 மணி அளவில் அங்கிருந்த பூங்கா ஊழியர்கள் அப்பகுதிக்குச் சென்று பார்த்தனர்.
அப்போது, 3 வயதான யானைக்குட்டி ஒன்று நீர்வீழ்ச்சிக்குக் கீழே உயிரிழந்த நிலையில் மூழ்கி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், அந்த யானைக் குட்டியைக் காப்பாற்ற வந்த இரண்டு யானைகள் நீர்வீழ்ச்சிக்கு மேலே சோர்ந்து நின்றிருப்பதும் தெரிய வந்தது.