உலகில் தொழில்நுட்ப வளர்ச்சியால் பல நன்மைகள் ஏற்பட்ட போதிலும் சில தீமைகளும் ஏற்படத்தான் செய்கிறது. குறிப்பாக, 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க தேர்தலில், ரஷ்ய உளவாளிகள் தலையிட்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் ரஷ்ய உளவாளிகள் சதி வேலையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அது மட்டுமின்றி, தென்கொரியாவில் நடைபெற்ற மழைக்கால ஒலிம்பிக்ஸ், அமெரிக்க வர்த்தகம் உள்ளிட்டவற்றை குறிவைத்து ரஷ்ய உளவாளிகள் சைபர் தாக்குதலில் ஈடுபட்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும், ரஷ்ய உளவு அமைப்பான ஜிஆர்யுவில் பணி புரிந்தவர்கள் ஆவர். ரஷ்யாவின் புவிசார் அரசியல் நலனை கருதியும், எதிரி நாடுகளின் நிலைத் தன்மையை குறைக்கவும் சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.