தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஆஸ்கர் விருது பெற்ற படத்தில் தன்பால் ஈர்ப்பு காட்சிகள் நீக்கம்! - போஹேமியன் ராப்சோடி

பெய்ஜிங்: ஆஸ்கர் விருது பெற்ற 'போஹேமியன் ராப்சோடி' படத்திலிருந்து ஆறு தன்பால் ஈர்ப்பு தொடர்பான காட்சிகள் சீனாவில் நீக்கப்பட்டுள்ளது.

ஆஸ்கர் விருது பெற்ற படத்தில் ஓரினச்சேர்க்கை காட்சிகள் நீக்கம்!

By

Published : Mar 25, 2019, 2:32 PM IST

சமீபத்தில் நடைபெற்ற 91வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த நடிகர், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலிப்பதிவு, சிறந்த ஒலி கலவை ஆகிய விருதுகளை 'போஹேமியன் ராப்சோடி' திரைப்படம் கைப்பற்றியது.

இளவரசி ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகவைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் தன்பால் ஈர்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் காட்சிகளை அதிகளவில் உள்ளது.

இந்நிலையில், சீன மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு மார்ச் 22ஆம் தேதி வெளியான இத்திரைப்படத்தில் தன்பால் ஈர்ப்புசார்ந்த ஆறு காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.

சீனாவில் 2011ஆம் ஆண்டு மனநல குறைபாடு பட்டியலிலிருந்து தன்பால் ஈர்ப்பு நீக்கப்பட்டாலும் தொடர்ந்து எதிர்ப்பு நீடிக்கிறது.

இதற்கிடையே, 'போஹேமியன் ராப்சோடி'திரைப்படம் சீனாவில் வெளியாகியுள்ளது தன்பால் ஈர்ப்பை விரும்பும் சாரார்மத்தியில் உற்சாகத்துடன் கொண்டாடிவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details