லியோனிங் மாகாணத்திலுள்ள கையூவன் நகரில் கடந்த 3 ஆம் தேதி (புதன்கிழமை) உள்ளூர் நேரப்படி மாலை 5.10 மணிக்குப் பலத்த சூறாவளிக் காற்று வீசியது. மணிக்கு 82 கிலோ மீட்டர் வேகத்தில் சுழன்றடித்த சூறாவளிக் காற்று, சுமார் 15 நிமிடங்களுக்கு நீடித்தது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகள் பெருத்த சேதத்தைச் சந்தித்துள்ளது.
சீனாவில் சூறாவளிக் காற்றில் சிக்கி 6 பேர் பலி! - பலி
பெய்ஜிங்: சீனாவின் கையூவன் நகரில் வீசிய பலத்த சூறாவளிக் காற்றில் சிக்கி இதுவரை ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும், 200 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
6 பேர் பலி
இதனைத் தொடர்ந்து, கொட்டி தீர்த்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதுவரை ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும், 200 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சீரமைக்க மீட்புத் துறை துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.