பசிஃபிக் நெருப்பு வளையத்திற்குட்பட்ட தீவு நாடான ஜப்பானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமாகும்.
ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை!
டோக்கியோ: ஜப்பானின் சகாடா நகர் அருகே 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
japan
இந்நிலையில், அந்நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள கடற்கரை நகரமான சகாடாவிலிருந்து, கடலில் சுமார் 48 கி.மி. தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 6.2ஆகப் பதிவாகியுள்ள இந்த நடுக்கத்தால், இஷிகாவா பிராந்தியத்துக்குட்பட்ட யமாகாடா, நீகாடா, நோடோ உள்ளிட்ட பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது அந்நாட்டு வானநிலை ஆய்வு மையம்.
ஆனால் இந்த சுனாமியால் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு எனவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Last Updated : Jun 18, 2019, 11:47 PM IST