பாகிஸ்தானில் உள்ள புனிதத் தளங்களுக்கு யாத்திரை செல்வோருக்கென அந்நாடு விச வழங்குவது வழக்கம். அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் மத சம்பந்தமான திருவிழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு ஆயிரக்கணக்கான இந்தியர்கள், பாகிஸ்தான் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், மகாராஜா ரன்ஜித் சிங்கின் நினைவு தினம், லாகூரில் உள்ள அவரது சமாதியில் சீக்கியர்களால் நாளை அனுசரிக்கப்படவுள்ளது.
இதற்காக, இந்தியாவைச் சேர்ந்த 282 சிக்கீயர்களுக்கு விசா வேண்டி ஷிரோமணி குருத்துவாரா பர்பந்தக் குழு (‘Shiromani Gurdwara Parbandhak Comittee) , பாகிஸ்தானுக்கு விண்ணப்பம் அனுப்பியிருந்தது. இதில், 58 விண்ணப்பங்களைப் பாகிஸ்தான் நிராகரித்துள்ளதாக அக்குழு தெரிவித்துள்ளது.
இதற்குக் கண்டனம் தெரிவித்து , ஷிரோமணி குருத்வாரா பர்பன்தக் குழு அலுவலகம் முன்பு விசா மறுக்கப்பட்ட சீக்கியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"282 விசா விண்ணப்பங்களில், 244 விண்ணப்பங்களை பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டதாகவும், 58 விண்ணப்பங்களை நிராகரித்துள்ளது" என ஷிரோமணி குருத்துவாரா பர்பந்தக் குழுவின் செயலாளர் மன்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். மேலும், விசா முறையை முடிவுக்கு கொண்டுவரவும், விசா இல்லாமல் புனித யாத்திரைச் செல்வோர் பாகிஸ்தானுக்குள் அனுமதிக்கவும் தாங்கள் வலியுறுத்தியுள்ளதாக, அவர் கூறினார்.