பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மதரசாவில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டபோது, குண்டு வெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 8 பேர் உயிரிழந்தனர். 137 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பினரும் பொறுப்பேற்கவில்லை. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாகிஸ்தான் பெஷாவர் மதராசாவில் குண்டுவெடிப்பு: 55 பேர் கைது! - பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழப்பு
கராச்சி: பாகிஸ்தானில் மதராசாவில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என கருதிய 55 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ak
இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 55 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதானவர்களை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு 5 கிலோ அளவுக்கு வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கின்றனர்.