உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இலங்கையையும் விட்டுவைக்கவில்லை. அதன்படி, இலங்கையில் அங்கோடாவைச் சேர்ந்த 52 வயதான சுற்றுலா வழிகாட்டிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.
இது குறித்து இலங்கை அரசு வெளியிட்ட அறிக்கையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த சுற்றுலா வழிகாட்டி சமீபத்தில் இத்தாலி நாட்டு சுற்றுலா பயணியுடன் பயணித்துள்ளார். இதனால்தான் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் எனத் தெரியவந்தது.