தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஆவேசமாக படையெடுத்த சீன வீரர்கள்; உறுதியுடன் எதிர்கொண்ட இந்திய துருப்புகள்

இந்திய ராணுவ வீரர்களை நோக்கி 50க்கும் மேற்பட்ட சீன துருப்புகள் படையெடுத்ததாகவும், அதை இந்திய துருப்புகள் உறுதியுடன் எதிர்கொண்டு முறியடித்ததாகவும் அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

PLA soldiers
PLA soldiers

By

Published : Sep 8, 2020, 9:48 PM IST

இந்தியா - சீனா எல்லைப் பகுதியில் இரு தரப்பு ராணுவமும் மீண்டும் மோதல் போக்கில் ஈடுபட்டுவருகின்றன.

இது தொடர்பாக இன்று (செப்.8) அரசு தரப்பு தகவல்கள் கூறுகையில், “கிழக்கு லாடக்கின் முக்பாரி என்ற பகுதியில் உள்ள இந்திய ராணுவ பகுதியை நோக்கி சுமார் 50 சீன ராணுவ வீரர்கள் கூர்மையான ஆயுதங்கள், துப்பாக்கிகளுடன் படையெடுத்து வந்துள்ளனர்.

இதை உன்னிப்பாக கவனித்த இந்திய ராணுவ வீரர்கள் அவர்களை உறுதியாக எதிர்கொண்டு தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அதையெடுத்து சீன வீரர்கள் தங்கள் பகுதியை நோக்கி பின்வாங்கியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் எந்தவிதமான தாக்குதலோ, துப்பாக்கிச் சூடோ ஏற்படவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக ஜூன் 15ஆம் தேதி இரு தரப்பு ராணுவமும் மோதிக்கொண்டதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். சீனத் தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.

இதையும் படிங்க:சார் தாம் திட்ட விரிவாக்கத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை

ABOUT THE AUTHOR

...view details