பிரதமர் நரேந்திர மோடி, 2016ஆம் ஆண்டு 500, 100 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று திடீரென அறிவித்தார். இதனையடுத்து, அந்த நோட்டுக்கள் அனைத்தையும் இந்திய மக்கள் போராடி மாற்றினர். மேலும், இந்த நோட்டுக்களை வைத்திருப்பது குற்றம் என்றும் மத்திய அரசு அறிவித்தது.
இந்திய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் நேபாளத்தில் பறிமுதல்! - banned
காத்மாண்டு: இந்தியாவில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்திருந்த ஐந்து பேர் நேபாள நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், சட்டவிரோதமாக இந்த நோட்டுக்களை மாற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, இந்திய எல்லையை ஒட்டியுள்ள நாடுகளில் அதிகளவிலான நோட்டுக்கள் மாற்றப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், நேபாளம் நாட்டில் தடை செய்யப்பட்ட 500, 100 ரூபாய் நோட்டுக்கள் மாற்றப்பட்டு வருவதாக காவல் துறையினருக்கு, தொடர்ந்து புகார் வந்தன. இந்நிலையில், தலைநகர் காத்மாண்டுவில் தனியார் விடுதியில் சட்டவிரோதமாக பணமாற்றம் செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது தொடர்பாக விடுதியில் சோதனை மேற்கொண்ட காவல் துறையினர், 10 லட்சம் வரையிலான பழைய 500, 1000 இந்திய ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.