தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 5 பேர் உயிரிழப்பு - கடை ஒன்றில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர குண்டுவெடிப்பில் ஐந்து பேர் உயிரிழந்தனர். பத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

5-killed-10-injured-in-pakistan-blast
5-killed-10-injured-in-pakistan-blast

By

Published : Aug 10, 2020, 5:06 PM IST

பாகிஸ்தானின் சாமன் நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் ஐந்து பேர் உயிரிழந்ததாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கிடைத்த தகவலின்படி, மோட்டார் சைக்கிளில் வெடிக்கும் சாதனம் (ஐஇடி) பொருத்தப்பட்டு இந்த தாக்குதல் நடந்துள்ளதாக தெரிகிறது. இதன் விளைவாக, அருகிலுள்ள மெக்கானிக் கடை ஒன்று தீயில் கருகி சேதமடைந்தது.

பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியை சுற்றி வளைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்தவொரு குழுவும், தனிநபரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

இந்த சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதில் ஏற்பட்ட உயிரிழப்புகள் வருத்தமளிக்கிறது. காயமடைந்தவர்களை மீண்டு வர பிரார்த்தனை செய்கிறேன் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக பலுசிஸ்தானில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details